15 December 2012

கதையும்-படிப்பினையும் | புதிய பார்வை

             ஏக இறைவனின் திருப்பெயரால் ஒரு ரயில் பயணத்தில் தந்தையும்,அவரது 10 வயது மகனும் அவர்களின் எதிரே ஒரு வாலிபரும்  பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாலிபருக்கோ ஒரு ஆசை.இந்த ரம்மியமான பயணத்தில் தான் தேடி அலைந்து வாங்கிய, தனக்கு விருப்பமான அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்து விட வேண்டுமென்று எண்ணி படிக்கத் துவங்கினார். 

படிக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே ''அப்பா அது என்னப்பா?'' என்று ஒலித்தது ஒரு குரல். எதிரில் இருந்த சிறுவன்தான் அது

சிறுவனின் தந்தை ''அதுதான் செல்லம் புத்தகம்,அதில்  கதையெல்லாம் இருக்கும்.நான் உன்னை தூங்க வைக்க சொல்லுவனே, அது போல நிறைய கதைகள் இருக்கும்.

அந்த வாலிபர் ''10 வயது சிறுவனுக்கு புத்தகம் என்றால் என்னவென்று கூட தெரியாது போல'' என்று மனதிற்குள் எண்ணியபடியே படிப்பதை தொடர்ந்தார்.

4 November 2012

மாற்றுத் திறனாளியாக இருந்த நான் இனி உங்கள் சகோ ஹசனாக...

''மாற்றுத் திறனாளி'' என்ற பெயரை மாற்றி ''உங்கள் சகோ ஹசன்'' என்று வைத்திருக்கிறேன்.ஏன் இந்த மாற்றம் என்பதற்கான சிறு விளக்கம்தான் இப்பதிவு.

முதலில் என் அறிமுக பதிவில் என் பெயரயோ,என்னைப் பற்றிய வேறு தகவல்களயோ கூறாததற்க்கு இரண்டு காரணம் கூறி இருந்தேன்.

அதில் ஒன்று : 

எனது இணைய நண்பர்களுக்கு என் உடல் நிலை குறித்து தெரியாது.தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்பதால். 

29 October 2012

மனிதர்களை அவர்கள் மனம் மகிழும்படி அடையாளப்படுத்துங்கள்

A : ஏங்க இந்த ஏரியால இனியவன்-னு ஒருத்தர், அவரு வீடு எங்க இருக்கு-னு தெரியுமா?

B : இல்லைங்க தெரியாது

A : அவரு  பிரபல எழுத்தாளருங்க,நிறைய விருதுலாம் வாங்கி இருக்காருங்க 

B : அப்படியா! தெரியலைங்களே

A : (தயங்கியபடி) அவருக்கு கூட கொஞ்சம் உடம்பு சரியில்ல 

B : அட அந்த கால் கொஞ்சம்,நடக்க முடியாம தடுமாறி நடப்பாரே அவர  சொல்லுறீங்களா?

A : அவர்தான்

B : இத முதல்லயே சொல்ல கூடாதா.... இப்புடியே நேரா போய் வலது பக்கம் திரும்புனீங்க-னா இரண்டாவது வீடு. 

17 October 2012

பில் கேட்ஸுக்கு ஒரு கடிதம்-அக்மார்க் மொக்கை

முன் குறிப்பு : இதை படித்து நீங்க கன்னாபின்னானு கடுப்பானா அதுக்கு கம்பெனி பொறுப்பேத்துக்காது.... :)அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

10 October 2012

நாட்டின் 5 முட்டாள்கள்

என்னைப் பொருத்த வரையில் நகைச்சுவையை நமக்குள்ளே வைக்க கூடாது.அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
copyrights பத்திலாம் யோசிக்க படாது. 

அதான் நான் பேஸ்புக்கில் படித்து சிரித்த ஒரு நகைச்சுவையை நீங்களும் சிரிக்கும் பொருட்டு இங்கு பதிகிறேன்.படிச்சி சிரிங்க..... :)

குறிப்பு : நகைச்சுவையை நகைச்சுவையாகவே ஏற்கும் பக்குவம் இருந்தால் மட்டும் தொடருங்கள்.

7 October 2012

மகத்தான சந்திப்பு- வானவன் மாதேவி-வல்லபி


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த  மகத்தான இரு வாசகர்கள் பற்றி அவரது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அந்த உணர்வுப்பூர்வமான பதிவை அவரின் அனுமதியுடன் இங்கு பதிகிறேன்.அவசியம் பொறுமையா படிங்க. 


ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,

5 October 2012

என்னைப் பற்றி....

தினம் தினம் புதுப்புது சவால்களை சமாளித்து வாழும் சாதாரண மனிதன் நான்.

தசைவளக்கேடு (அ) தசைச் சிதைவு நோய் (Muscular_dystrophy) இந்த நோயைப் பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம்.பலர் கேள்விப்படாமலும் இருக்கலாம்.
ஆனால் இந்நோயின் தாக்கத்தை உணர்ந்தவர்கள் யாரேனும் இங்கு இருப்பார்களா என்றால் அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவே.