5 October 2012

என்னைப் பற்றி....

தினம் தினம் புதுப்புது சவால்களை சமாளித்து வாழும் சாதாரண மனிதன் நான்.

தசைவளக்கேடு (அ) தசைச் சிதைவு நோய் (Muscular_dystrophy) இந்த நோயைப் பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம்.பலர் கேள்விப்படாமலும் இருக்கலாம்.
ஆனால் இந்நோயின் தாக்கத்தை உணர்ந்தவர்கள் யாரேனும் இங்கு இருப்பார்களா என்றால் அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவே.நான் உணர்ந்து இருக்கிறேன்.உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.

எனது 9-ஆம் வயதில் இந்நோயின் பாதிப்பு என்னை கொஞ்சம்,கொஞ்சமாக
ஆக்கிரமித்து கடந்த 10 வருடங்களுக்கு மேல் என்னை வீட்டிலேயே முடக்கி போட்டு வைத்திருக்கிறது.

இந்நோயைப் பற்றி சுருங்கச் சொன்னால்


பொதுவாக மனிதர்களுக்கு உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். ஆனால் புதிய செல்கள் உருவாகாது.  

அதனால் உடலில் உள்ள தசைகள், மெல்ல மெல்ல தனது சக்தியை இழக்கத் தொடங்கும்.
அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி இறுதியில் இருதயமும் செயல் இழந்து விடும்.


இதை நான் இங்கு கூற காரணம், இந்நோய் குறித்த விழிப்புணர்வு நம்மில் பலருக்கும் இல்லை.ஒரு புள்ளி விவரத்தின் படி இந்தியாவை பொறுத்த வரை 3 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை தசை சிதைவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். 5.5 லட்சம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு உள்ளது.
ஆகையால் இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் யாரேனும் இந்நோய் குறித்த ஒரு விழிப்புணர்வு பதிவு போட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். 
(பரவலாக இந்நோயை தசைச் சிதைவு நோய் என்றுதான் சொல்வார்கள்.
விக்கில தான் தசை வளக்கேடுனு போட்டு இருக்காங்க)


இவ்வலைப்பூவில் நான் என் வாழ்வில் கண்ட நிகழ்வுகளையும், உணர்ந்த வலிகளையும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.ரொம்ப சோகமா இருக்கும்னு
பயப்படாதீங்க.அவ்வப்போது நகைச்சுவை பதிவுகளும், தொழில்நுட்ப பதிவுகளும் இடம் பெரும் (பேசிக்கலி ஐ எம் எ காமெடி பெர்சன்) :)

மிகுந்த நெருக்கடிக்கு இடையில் இவ்வலைப்பூவில் எழுத இருக்கிறேன் அனைவரின் ஆதரவை எதிர்ப்பார்த்தவனாய்.

உலகத்துலயே on-screen keyboard ல பிளாக் எழுத போற முதல் ஆள்
நானா கூட இருக்கலாம். :)


முக்கியமான மூன்று விடயங்களை இங்கு சொல்ல விரும்புகிறேன். 

1.இந்த வலைப்பூவை நான் தொடங்க காரணம்.

அ. என் தனிமையை விரட்டி
தன்னம்பிக்கயை வளர்த்து கொள்ள வேண்டி. 

ஆ.ஒரு மாற்றுதிறனாளியின் வாழ்க்கையையும், உணர்வுகளையும் நீங்கள்
அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டி. 

2.என் பெயரயோ,என்னைப் பற்றிய வேறு தகவல்களயோ கூறாததற்க்கு காரணம்.

அ.இவ்வலைப்பூவில் என்னை ஒரு மாற்றுத் திறனாளி என்கிற ரீதியாக பார்ப்பதயே விரும்புகிறேன். இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ என்னை பார்ப்பதை விரும்பவில்லை. 

ஆ.எனது இணைய நண்பர்களுக்கு என் உடல் நிலை குறித்து தெரியாது.தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்பதால். 

3.இப்பதிவை படிப்பவர்களுக்கு சில வேண்டுகோள்.

அ.உங்களால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த வலைப்பூவை  அறிமுகப்படுத்துங்கள். பதிவுலகத்தில் என்னை தனியே விட்டு விடாதீர்கள். 

ஆ. எனது கருத்துக்களிலோ, எழுத்து நடையிலோ ஏதேனும் குறைகள் இருப்பின் (இருக்கும்) தன்மையாக சொல்லுங்கள் புரிந்து கொள்கிறேன்.


டிஸ்கி : எல்லாப் பதிவின் முடிவிலும் டிஸ்கினு எதாவாது எழுதுறாங்க.
ஆமா இந்த டிஸ்கினா என்ன? தெரிஞ்சவங்க சொல்லுங்க.42 comments:

 1. naangal maatru thiranaalikalukkaana arakattalai nadathukirom (guide special Persons social economical development trust)

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ழ்ச்சி நண்பா.அதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன மாதிரியான உதவிகளை செய்கிறீர்கள்?

   Delete
 2. ஸலாம்

  என்ன நண்பா இப்ப எப்படி உங்க உடம்பு இருக்கு ... எந்த நிலையில் ? ட்ரீட்மென்ட் எடுத்தீங்களா ? டாக்டர் என்ன சொன்னாங்க ?

  உங்க உடல் நலம் குணமாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ....

  //டிஸ்கி : எல்லாப் பதிவின் முடிவிலும் டிஸ்கினு எதாவாது எழுதுறாங்க.
  ஆமா இந்த டிஸ்கினா என்ன? தெரிஞ்சவங்க சொல்லுங்க.//

  எனக்கும் தெரியலையே !!!


  ReplyDelete
  Replies
  1. ///ஸலாம்///

   உங்களுக்கும் :)

   ///என்ன நண்பா இப்ப எப்படி உங்க உடம்பு இருக்கு ... எந்த நிலையில் ? ட்ரீட்மென்ட் எடுத்தீங்களா ? டாக்டர் என்ன சொன்னாங்க ?///

   இந்த நோயின் 2-ஆம் நிலையான தவழ்ந்து செல்லும் நிலையில் உள்ளேன்.
   இதுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கல நண்பா.டாக்டர் என்ன செய்வாங்க. :(

   ///உங்க உடல் நலம் குணமாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ....///

   உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டம் எனக்கு கொடுத்த மகிழ்ச்சி ஈடில்லாதது..

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
  2. எனக்கும் தெரியலையே !!!///

   :)

   Delete
 3. Dear friend, our support will be there always...keep writing...

  good luck

  Raja

  ReplyDelete
  Replies
  1. @Raja

   Thank u so much for your valuable comment...i'm very happy now:)

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 4. ஏங்க நல்லா தாங்க எழுதுறீங்க.. அக்சுவல்லி கலக்குறீங்க.. வாங்க வாங்க.. கலக்கிடலாம் நண்பா..

  ReplyDelete
  Replies
  1. @ஹாரி பாட்டர்

   உங்களின் இந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பா.இதுதான் எங்களது தேவை.கலக்குவோம் :)

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 5. அன்புடையீர்,
  உங்களது இந்தப் பதிவு மனதை ரொம்பவும் நெகிழ வைத்து விட்டது.
  உங்களைபோன்ற இருவரை சந்தித்து இருக்கிறேன்.

  இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். பதிவு வெளி வந்ததும் இணைப்பைக் கொடுக்கிறேன்.கொஞ்சம் பொறுத்திருங்கள்.

  இதனால் உங்கள் பதிவுகளை பலரும் படிக்க வாய்ப்பு உண்டு.

  என்னால் ஆன சின்ன உதவி.

  அன்புடன்,
  ரஞ்ஜனி

  ranjaninarayanan.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. ///உங்களது இந்தப் பதிவு மனதை ரொம்பவும் நெகிழ வைத்து விட்டது.
   உங்களைபோன்ற இருவரை சந்தித்து இருக்கிறேன்.///

   அவர்களை பற்றிய சிறு விவரம் கொடுங்களேன்.

   ///இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். பதிவு வெளி வந்ததும் இணைப்பைக் கொடுக்கிறேன்.கொஞ்சம் பொறுத்திருங்கள்.

   இதனால் உங்கள் பதிவுகளை பலரும் படிக்க வாய்ப்பு உண்டு.

   என்னால் ஆன சின்ன உதவி.///

   இந்த ஊக்கம்தான் எங்களது தேவை.மிக்க மகிழ்ச்சி... :)

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 6. வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். தளராத தன்னம்பிக்கையைக் கண்டு மகிழ்ச்சி. இறைவன் அருள்கூரப் பிரார்த்திக்கீறேன்.

  மஸ்குலர் ட்ஸ்ட்ராஃபி பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டது இல்லை. இறைவன் அனைவரையும் காக்கவேண்டும்.

  //உலகத்துலயே on-screen keyboard ல பிளாக் எழுத போற முதல் ஆள்
  நானா கூட இருக்கலாம்.//
  புதிய தகவல். எப்படி இந்த முறையைப் பயனப்டுத்துறீங்கன்னு ஒரு பதிவா எழுதுங்களேன்.

  //ஒரு மாற்றுதிறனாளியின் வாழ்க்கையையும், உணர்வுகளையும் நீங்கள்
  அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டி. //
  நிச்சயமாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது. பல விஷயங்களையும் taken for granted-ஆக எடுத்துக்கொள்ளும் என்னைப் போன்றவர்கள், உங்களிடம் படித்துக் கொள்ள, கண்டிப்பாக நிறைய இருக்கும். எழுதுங்கள், பின் தொடர்கிறேன். இறைவன் நாடினால்.

  ReplyDelete
  Replies
  1. //உலகத்துலயே on-screen keyboard ல பிளாக் எழுத போற முதல் ஆள்
   நானா கூட இருக்கலாம்.//

   புதிய தகவல். எப்படி இந்த முறையைப் பயனப்டுத்துறீங்கன்னு ஒரு பதிவா எழுதுங்களேன்.///

   நல்ல யோசனை இதையே ஒரு பதிவா போட்டுட்டா போச்சு. :)

   //நிச்சயமாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது. பல விஷயங்களையும் taken for granted-ஆக எடுத்துக்கொள்ளும் என்னைப் போன்றவர்கள், உங்களிடம் படித்துக் கொள்ள, கண்டிப்பாக நிறைய இருக்கும். எழுதுங்கள், பின் தொடர்கிறேன். இறைவன் நாடினால்.//

   ஆமா நிறைய எழுதனும்-னு ஆசை இருக்கு.பல விடயங்கள் இருக்கு.தொடருங்கள்...

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும்
   நன்றி தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 7. அன்புடையீர்,
  இன்று உங்களை பற்றி வலைசரம் பதிவில் சொல்லி இருக்கிறேன்.
  இதோ இணைப்பு:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html

  வந்து பார்க்கவும்.

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன்.... மகிழ்ந்தேன்.... :)

   புதிய தளம் இப்போதுதான் தொடங்கி உள்ளேன்.ஊக்கப்படுத்து விதமாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

   நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது.தொடர்கிறேன்.

   Delete
 8. அன்புள்ள திறனாளி அவர்களுக்கு,
  நீங்கள், 'மாற்று' என்று எழுதாமலிருந்தால், யாருக்கும் உங்கள் குறை தெரிந்திருக்காது. அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் முயற்சி
  "Muscular Distrophy" பற்றி பலரும் அறியவேண்டும் என்பதுதான். உங்களைப்பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். உங்கள் தளயத்தை என்னுடைய வட்டாரத்து நண்பர்பளுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீங்கள் நலமுடன் வாழ, உங்கள் முயற்சிகள், வளர, என்னுடைய வாழ்த்துக்கள்
  வத்சலா

  ReplyDelete
  Replies


  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 9. ஆஹா... வாங்க பாஸ்! ரொம்ப சந்தோசம்! இனி வரும் காலம் நமது காலம்! மாற்றுத்திறனாளிகள் வலைஉலகில் சாதிக்கக் கிளம்பிவிட்டோம்!

  நாங்க இருக்கோம்! எப்பவுமே ஆதரவு கொடுக்க!

  ---

  www.sudarvizhi.com
  வந்து பார்க்கவும்.


  ReplyDelete
  Replies
  1. ///ஆஹா... வாங்க பாஸ்! ரொம்ப சந்தோசம்! இனி வரும் காலம் நமது காலம்! மாற்றுத்திறனாளிகள் வலைஉலகில் சாதிக்கக் கிளம்பிவிட்டோம்!
   நாங்க இருக்கோம்! எப்பவுமே ஆதரவு கொடுக்க!
   ///

   ஊக்கப்படுத்தும் உற்சாக வார்தைகள்.வலையுலகில் வேறு மாற்றுத் திறனாளிகள் யாரையேனும் தங்களுக்கு தெரியுமா?

   ///www.sudarvizhi.com
   வந்து பார்க்கவும்.
   ///

   பார்த்தாச்சு follower-ம் ஆகியாச்சு :)

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 10. நீங்கள் மாற்றுத் திறனாளி என்பதை மாற்றத்தை கொண்டு வரப் போகும் திறமைசாலி என்று சொல்லலாம்... உங்கள் எழுத்து நடை அவ்வளவு அற்புதம்..

  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வண்ணம் உங்கள் அறிமுகம் உள்ளது. உங்களை போன்ற அனைவருக்கும் வல்ல இறைவன் துணை புரிவானாக!!! கண்டிப்பாக நீங்கள் வெற்றியடைவீர்கள்... எழுதுங்கள் எழுதுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...

  எனக்கு தெரிந்த முக நூல் குழுக்கள் அனைத்திலும் உங்கள் பிளாக் சேர் செய்துள்ளேன்..

  டிஸ்கி என்றால் இந்த கடிதத்தில் எல்லாம் எழுதுவோமே பின்குறிப்பு அப்படின்னு அது போலன்னு வச்சுக்கலாம்.... :)

  ReplyDelete
  Replies
  1. ///டிஸ்கி என்றால் இந்த கடிதத்தில் எல்லாம் எழுதுவோமே பின்குறிப்பு அப்படின்னு அது போலன்னு வச்சுக்கலாம்.... :)///

   அவ்ளோதானா... !:)


   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 11. அண்ணா ..உங்க கிட்ட நான் முகநூலில் பேசி இருக்கின்றேன் ....இப்பதான் தெரிந்தது ..நீங்க ரொம்ப தையிரிய சாலினு ..உங்களை நினைக்கும் பொழுது ரொம்ப .பெருமையாக இருக்கு ...இந்த தைய்ரியம் ..யாருக்கு வரும் ...இந்த தைரியமே போதும் ..உங்களுக்கு இருக்குற நோய் .காணமல் போய்விடும் ..இந்த நோய்க்கு மருந்து இல்லைன்னு யார் சொன்னது ...எல்லார்கிட்டயும் இதுக்கு மருந்து இருக்கு >>>>துவா<<<<< இத விட பவர் புல்லான மருந்து உலகத்தில் இல்லை ....இந்த மருந்து போதும் உங்களை குணப்படுத்த ......

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரினாஷ் தம்பி... உண்மைதான் பிரார்த்தனையை சிறந்த மருந்து இல்லை என்பதில் எனக்கும் முழு நம்பிக்கை உண்டு. தொடர்ந்து பிரார்த்தியுங்கள் சகோ...

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 12. அருமையான எழுத்து நடை சகோ.

  நீங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல வல்லோனை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 13. அஸ்ஸலாமுஅலைக்கும் வர்ஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
  மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை..நீங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல வல்லோனை பிரார்த்திக்கிறேன் ameen.

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி

   Delete
 14. நண்பா உங்களை தனியாலாம் விட மாட்டோம்,,,,நாங்க இருக்கோம்...வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,பிரார்த்தனைக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 15. அருமையாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை, உங்களிடம் இருந்து அதிககடியான தண்நம்பிக்கை கற்றுக்கொள்ளவேண்டும். தொடருங்கள் நன்பரே, நாங்கள் தொல் கொடுக்கிறோம். தடைகளை தகர்க்கும் உங்கள் என்னம் வெற்றியடைய வாழ்த்துங்கள் நன்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும், நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 16. சகோதரா....உங்கள் உடல் பரிபூரணமாக குணமளிக்க வல்ல இறைவன் அருள் புரிவானாக....ஆமீன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,பிரார்த்தனைக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 17. சகோதரனே . என்றும் நான் உன்னேடு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 18. உங்கள் இம்மை மறுமை வாழ்க்கை நலமாகட்டும் என மனமுருகி பிரார்த்திக்கிறேன்..

  இறைவன் என்றும் உங்களுடன் துணை நிற்பானாக!

  சிங்கம் போல் வாழுங்கள்..இறுதிவரை துணிவோடு வாழுங்கள்..இறைவன் உதவியால் வெற்றி நிச்சயம் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 19. ஊக்கப்படுத்தும் உற்சாக வார்தைகள்.வலையுலகில் வேறு மாற்றுத் திறனாளிகள் யாரையேனும் தங்களுக்கு தெரியுமா?///
  ///  தங்கலின் கேழ்விக்கான பதில்

  கீழ் உள்ள சுட்டிகலை க்லிக் செய்து படித்து பாருங்கல்....


  மனதில் உறுதி வேண்டும்: வலையுலகில் சுடர்விழி-என்னைப்பற்றி!


  http://www.sudarvizhi.com/2012/10/blog-post_26.html


  ---


  மனதில் உறுதி வேண்டும்: சுடர் விழி!...


  ---


  http://www.sudarvizhi.com/2012/10/blog-post_27.html


  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நினைச்சேன்.அதான் சுத்தி வளைச்சு அப்புடி கேட்டேன்.

   ///இனி வரும் காலம் நமது காலம்! மாற்றுத்திறனாளிகள் வலைஉலகில் சாதிக்கக் கிளம்பிவிட்டோம்!///

   இந்த வார்த்தைதான் சந்தேகப் பட வைத்தது.... :)   Delete
 20. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ ஹசன்,

  உங்களை பற்றி முன்பே Facebook கூறியுள்ளேன் "நீங்கள் அதிகம் கருதிடுவதில்லை, ஆனால் உங்கள் கருத்துகள் அனைத்தும் முத்துக்கள்" என்று.

  என்னை FB-யில் அதிகம் ஊக்கப்படுத்தி ஒருவர், மிகமுக்கியமான பிரபலம் நீங்கள் எனக்கு.

  இன்று தான் உங்கள் தளத்தில் உங்களை பற்றி அறிந்துகொண்டேன்.

  இன்னொரு FB நன்பரையும் (https://www.facebook.com/irfanhfz) தெரியும், Brother Irfan Hafiz அவர்முலம் தான் நான் முதல்முதலில் Duchenne muscular dystrophy பற்றி அறிந்து கொண்டேன். ஆனால் உங்கலிடத்தில் உரையாடியது போல் அவரிடம் பேசியதில்லை.

  his Blog: http://irfanhfz.blogspot.com/

  videos: https://www.facebook.com/media/set/?set=vb.1337771237&type=2

  உங்களுக்கு மேலதிக ஊக்கத்தை Br.Ifran வீடியோ தரும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துள்ளேன்.

  உங்களுக்கு தைரியம் சொல்ல வார்த்தை என்னிடத்தில் இல்லை, As you are a comedy person me too the same but emotional person also.

  //இந்த நோயின் 2-ஆம் நிலையான தவழ்ந்து செல்லும் நிலையில் உள்ளேன்.
  இதுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கல நண்பா.டாக்டர் என்ன செய்வாங்க. :(//

  நம்மெல்லாம் ஒண்ணுதான் சகோ என்ன ஒருநாளுல 8 அல்லது 10 மணி நேரம் சதையா நிக்கிறேன்.

  நானும் 50,000 ஆண்டுகள் ஒரு நாளாக இருக்க போகும் மஷர்ரில் நம் இறைவனை சந்திக்கும் தினத்தை என்னிகொண்டுதான் இருக்கேன் எப்படின்னு நீங்க கேளுங்களேன்.

  நீங்க கேளுங்களேன். நீங்க கேளுங்களேன்.!!!!

  சரி நானே சொல்லுறேன். :-)

  சராசரி மனித வாழ்கை 60 வருடத்திற்குள் என்றாகிவிட்டது, இதில் 20 வருடத்திற்க்கு பின்புதான் வாழ்கையை புரிந்துகொள்கிறோம். பாக்கி 40 ஆண்டுகள் X 365 = 14600 days. இதன் அடிபடையில் எனக்கு கணக்கு போட்ட 13505 days left*.

  * = அதற்கும் உத்தரவாதம் கிடையாது. அல்லாஹுவே நன்கு அறிந்தவன்.

  50,000 x 365 = 1,82,50,000 days for Judgement.

  நாம் வழபோகும் இந்த அற்பமான, மிக குறுகியகால வாழ்கையை அல்லாஹ் நமக்கு இலகுவாகி வைக்கட்டும்.

  சகோ. அல்லாஹ் மறுமையில் முக்கியமான உயர் பதவிகளை உங்களை பொறுப்பாளர்ராக வைத்துள்ளான் என்று நம்புகிறேன்.

  நம் தாயிமார்களைவிட நம் மீது அதிகம் நேசம், பாசம் கொண்டவன் நம் இறைவன், நிச்சயம் அவன் உதவி உங்களையும், என்னையும் வந்தடையும் என்ற நம்பிக்கையில்
  உங்கள் நண்பனாக - ரிஃபாத் அப்துல் ரெஜக்.

  ReplyDelete
 21. சகோதரர் ஹஸன். இன்ஷா அல்லாஹ் உங்களது தளத்தை எமது கிராமத்திற்கு அறிமுகப்படுத்துகிறேன்.

  ReplyDelete

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....