4 November 2012

மாற்றுத் திறனாளியாக இருந்த நான் இனி உங்கள் சகோ ஹசனாக...

''மாற்றுத் திறனாளி'' என்ற பெயரை மாற்றி ''உங்கள் சகோ ஹசன்'' என்று வைத்திருக்கிறேன்.ஏன் இந்த மாற்றம் என்பதற்கான சிறு விளக்கம்தான் இப்பதிவு.

முதலில் என் அறிமுக பதிவில் என் பெயரயோ,என்னைப் பற்றிய வேறு தகவல்களயோ கூறாததற்க்கு இரண்டு காரணம் கூறி இருந்தேன்.

அதில் ஒன்று : 

எனது இணைய நண்பர்களுக்கு என் உடல் நிலை குறித்து தெரியாது.தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்பதால். 


ஆனால் சில நாட்களுக்கு முன்னாள் என் இணைய சகோக்கள் அனைவருக்கும் என்னைப் பற்றி சொல்லி விட்டேன்.நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்  தொடர்ந்து எழுதுங்கள் என்று அவர்கள் கொடுத்த ஊக்கம் ஈடில்லாதது.

அவர்கள்தான் இணையத்தில் வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்த என்னை பண்படுத்தியவர்கள்.

அவர்களின் பதிவுகள்தான் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என் உள்ளத்தில் ஏற்படுத்தியது.என் கை வலிகளையும் மறந்து அவர்களுடன் உரையாடதான் ஓரளவு வேகமாக தட்டச்சி பழகினேன்.
மனிதர்களை அவர்கள் மனம் மகிழும்படி அடையாளப்படுத்துங்கள்
என்ற எனது பதிவை படித்து பாராட்டியதுடன் சிந்திக்க தூண்டிய ஒரு விடயத்தையும் முன்வைத்தார்கள்.

அது :  நீங்கள் உங்களின் உண்மையான பெயரில் எழுதினால்தான் உங்களின் பெயர் பதிவுலகில் 'எழுத்தாளர்' என்று நிலைக்கும். இல்லையேல்... என்னதான் நீங்கள் பதிவுலகில் உங்கள் எழுத்துத்திறனை கொட்டி ஏகப்பட்டோரை வென்றெடுத்தாலும் "மாற்றுத்திறனாளி" என்றே இப்பெயரை கடைசி வரை நிலைத்துவிடும்.


இதைப் படித்த பிறகுதான் என் தவறு எனக்கு உரைத்தது.நானே என்னை ஏன் மாற்றுத் திறனாளியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.பெயரை மாற்றி விடுவதே சிறந்தது என்று முடிவெடுத்தேன்.

என்ன பெயர் வைக்கலாம் என்று வினவிய போது என் பதிவில் இருந்தே ஒரு வரியை சுட்டிக் காட்டினார் ஒரு சகோ.


''எங்களுக்கு பார்த்து,பார்த்து அழகிய பெயர் சூட்டினார்களே....எதற்காக?......
தம்பி கேள்வியும் நீயே ...?
பதிலும் நீயே..?
''

என்று சொன்னதும் சிந்தித்து  சொந்த பெயரிலேயே எழுதலாம் என்றே இப்பெயரை தேர்வு செய்தேன். நான் உங்கள் அனைவருக்கும் சகோதரனாக இருப்பேன் என்ற அடிப்படையில் உங்கள் சகோ என்ற வார்தையயும் இணைத்துள்ளேன் :)

மாற்றுத் திறனாளி என்ற பெயர் மாறினாலும் மாற்றத்தை கொண்டு வரும் என் பதிவுகள் இறைவன் நாடினால் முன்பு போலவே, இல்லை முன்பை விட வீரியமாகவே வரும் என்ற உறுதியுடன்.........


 உங்கள் சகோ ஹசன் 


------------------------------------------------------

எனது அறிமுக  பதிவில் சகோதரி ஹுஸைனம்மா இப்படி கருத்திட்டு இருந்தார்.


---//உலகத்துலயே on-screen keyboard ல பிளாக் எழுத போற முதல் ஆள்
நானா கூட இருக்கலாம்.//

புதிய தகவல். எப்படி இந்த முறையைப் பயனப்டுத்துறீங்கன்னு ஒரு பதிவா எழுதுங்களேன்.---
இது அவருக்காக.

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் START MENU > ACCESSORIES > EASY OF ACCESS > ON-SCREEN KEYBOARD என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள புகைப்படத்தில் உள்ளது போன்ற விசைப் பலகை திரையில் தோன்றும்.


அதன் மேல் உள்ள எழுத்துக்களின் மேல் மவுஸ் கர்சரை வைத்து ஒவ்வொரு எழுத்தாக கிளிக் செய்ய வேண்டும்.இப்படித்தான் எழுதி வருகிறேன்.உங்கள் கணினியின் விசைப் பலகை செயல்படாத போது இது உங்களுக்கு உதவக் கூடும்.

இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம். 


45 comments:

 1. வாழ்த்துக்கள் தம்பி ....
  உங்கள் தன்னம்பிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
  தொடர்ந்து எழுதுங்கள் ....
  ஆர்வத்துடன்
  உங்கள் அன்பு அண்ணன்
  ரஹ்மான் சாதிக் ,மு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 2. ஸலாம் சகோ.ஹசன்,
  பெயர் மாற்றமும் உங்கள் தன்னம்பிக்கையும் மட்டிலா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
  தொடர்ந்து ஊக்கமுடன் எழுதுங்கள்.
  அனைத்து கஷ்டமும் நீங்கி உங்களுக்கு எல்லாம் இலகுவாக இறைவனை பிரார்த்தக்கிறேன். வாழ்த்துக்கள் சகோ..!

  ReplyDelete
  Replies
  1. உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் மகிழ்ச்சி... :)

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 3. வாழ்த்துகள் வாழ்த்துகள் தம்பீஈஈஈஈஈஈஈஇ

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி அண்ணாஆஆஆ :D
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
  2. சகோ.ஹைதர் அலி..

   பழைய சிவாஜி படம் எதையும் பார்த்தீங்களா...??? ஈ ஓவரா ஆயிட்டு ..பார்த்து பாய் டெங்கு வந்துறப்போகுது ...ஹா..ஹா..ஹா.

   Delete
 4. சலாம். தொடர்ந்து கலக்குங்க. உங்களோடு இணைந்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் ஹசனபி,

  மிக நல்ல மாற்றம். சமூகத்திற்கு பயன்படும்படியாக தொடர்ந்து உங்கள் எழுத்துக்கள் அமைந்து, நீங்கள் பலருக்கும் ஊக்கமாக இருக்க என்னுடைய பிரார்த்தனைகள்..

  உங்கள் அண்ணன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 6. என்னை பொருத்த வரையில் உடலில் குறையிருப்பவர்கள் மாற்றுத்திறனாளி அல்ல. மாறாக, உள்ளத்தில் குறையிருப்பவர்களே நிஜமான மாற்றுத்திறனாளிகள். முகமது ஆஷிக்கின் கோரிக்கையை ஏற்று உங்கள் உண்மையான பெயரில் எழுத வந்திருப்பது மகிழ்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஷிக் அண்ணன் என்றில்லை,பெரும்பாலான சகோக்கள் இதயே விரும்பினார்கள்.எனக்கும் பெயரை மாற்றி விடுவதே சிறந்தது என்று தோன்றியதால் இந்த முடிவெடுத்தேன்.

   Delete
 7. salam bro...!
  well job bro keep it up...! :)

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  உங்கள் எழுத்துக்கள் தான் உங்கள் அடையாளம்....!

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   ///உங்கள் எழுத்துக்கள் தான் உங்கள் அடையாளம்....!///

   :)

   Delete
 9. நா கேட்டதற்கிணங்கி, on-screen keyboard குறித்துப் பதிவெழுதியதற்கு நன்றி ஹஸன்.

  இதற்கு தனி மென்பொருள் நிறுவ வேண்டுமோ என்று நினைத்திருந்தேன். விண்டோஸிலேயே இருக்கிறது என்பது பயனளிக்கும் தகவல். நான் பயன்படுத்தும் விண்டோஸ் - எக்ஸ்.பி. யிலும் இது இருக்கிறது.

  //உங்கள் கணினியின் விசைப் பலகை செயல்படாத போது இது உங்களுக்கு உதவக் கூடும்.//

  ஆமாம், என்னுடையது வயர்லெஸ் கீ-போர்ட் என்பதால் விரைவில் பாட்டரி தீர்ந்துவிடும். பாட்டரி ஸ்டாக் இல்லாத சமயங்களில், வாங்கிவரும்வரை சிரமமாக இருக்கும். அப்போது பயன்படலாம், இன்ஷா அல்லாஹ்.

  தொடர்ந்து இதுபோல பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு உதவியாக இருந்தால் மகிழ்ச்சி சகோ...

   //இதற்கு தனி மென்பொருள் நிறுவ வேண்டுமோ என்று நினைத்திருந்தேன்.//

   தனி மென்பொருளும் இருக்கிறது.நன்றாக இருக்கும்.விருப்பமிருந்தால் முயற்சித்து பாருங்கள்.

   லிங்க் : http://www.chessware.ch/virtual-keyboard/download.php

   Delete
 10. Replies
  1. இறைவன் நாடினால் நிறைய எழுதுவேன் சகோ.

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 11. வாழ்த்துகள் வாழ்த்துகள் தம்பீ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸன்,

  உங்களது மாற்றத்திற்கு வாழ்த்துக்கள். -உங்களது
  ஆரோக்கியத்திற்கு பிறார்த்தனைகள்.
  தொடருங்கள்...... உங்களை தொடர்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 13. //விண்டோஸ் 7 இயங்குதளத்தில் START MENU > ACCESSORIES > EASY OF ACCESS > ON-SCREEN KEYBOARD என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள புகைப்படத்தில் உள்ளது போன்ற விசைப் பலகை திரையில் தோன்றும்.//

  One more way is ..Click start-->click run--> in the text box type osk and press enter.. That's it.

  ReplyDelete
  Replies
  1. குட் ஐடியா அண்ணா... :)

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி அண்ணா தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 14. எழுத்தின் மீது எந்தளவு ஆர்வமிருந்தால் OSK பயன்படுத்தி ப்ளாக் ஆரம்பித்திருப்பிர்கள்?!!! எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

  /அனைத்து கஷ்டமும் நீங்கி உங்களுக்கு எல்லாம் இலகுவாக இறைவனை பிரார்த்தக்கிறேன். வாழ்த்துக்கள் சகோ..!// ரிப்பீட்டு..:))

  ReplyDelete
  Replies
  1. ///எழுத்தின் மீது எந்தளவு ஆர்வமிருந்தால் OSK பயன்படுத்தி ப்ளாக் ஆரம்பித்திருப்பிர்கள்?!!! எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ///

   இணையம் என்னும் வாசலை திறந்து பல நல்ல சகோக்களின் ஊக்கத்தை கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்... :)

   Delete
 15. அஸ்ஸலாமு அலைக்கும்
  ஆக்கப்பூர்வமாக செயல் பட பிராத்திக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 16. சலாம் சகோ.ஹசன்

  சும்மா பின்னி பெடல் எடுங்க...வாழ்த்துக்கள் !!!

  நன்றியுடன்
  நாகூர் மீரான்

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 17. ஸலாமலைக்கும், வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 18. Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 19. சலாம்!

  வாழ்த்துக்கள் சகோ.... சமூகத்துக்கு பயன் தரும் வகையில் நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 20. வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 21. அன்பு சகோ பணி தொடர இறைவன் அருள் புரிவானாக..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete
 22. வாழ்த்துக்கள், உங்கள் பணி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா
   தொடர்ந்து வாருங்கள். :)

   Delete

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....