15 December 2012

கதையும்-படிப்பினையும் | புதிய பார்வை

             ஏக இறைவனின் திருப்பெயரால் ஒரு ரயில் பயணத்தில் தந்தையும்,அவரது 10 வயது மகனும் அவர்களின் எதிரே ஒரு வாலிபரும்  பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாலிபருக்கோ ஒரு ஆசை.இந்த ரம்மியமான பயணத்தில் தான் தேடி அலைந்து வாங்கிய, தனக்கு விருப்பமான அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்து விட வேண்டுமென்று எண்ணி படிக்கத் துவங்கினார். 

படிக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே ''அப்பா அது என்னப்பா?'' என்று ஒலித்தது ஒரு குரல். எதிரில் இருந்த சிறுவன்தான் அது

சிறுவனின் தந்தை ''அதுதான் செல்லம் புத்தகம்,அதில்  கதையெல்லாம் இருக்கும்.நான் உன்னை தூங்க வைக்க சொல்லுவனே, அது போல நிறைய கதைகள் இருக்கும்.

அந்த வாலிபர் ''10 வயது சிறுவனுக்கு புத்தகம் என்றால் என்னவென்று கூட தெரியாது போல'' என்று மனதிற்குள் எண்ணியபடியே படிப்பதை தொடர்ந்தார்.சிறிது நேரத்தில் மீண்டும் அந்த சிறுவனின் குரல், இப்போது மரத்தை நோக்கி என்ன அது என்று கேட்க, அவனது தந்தையும் மகிழ்வுடன் மரம் குறித்து விளக்கி கூறினார். 

இவர்களது பேச்சு அந்த வாலிபருக்கு தொந்தரவாக இருந்தது.சகித்துக் கொண்டு தொடர்ந்தார். 

ஆனால் சிறுவனோ விடுவதாக இல்லை.ஒவ்வொரு பொருளையும் காட்டி இது என்ன? அது என்ன? என்று கேள்வியால் தனது தந்தையை துளைத்து எடுத்தான்.

அவனது தந்தையும் அசராமல் புன்னகையுடன் ஒவ்வொன்றையும் குறித்து விளக்கமாக கூறினார். 

வாலிபருக்கோ பொறுக்க முடியவில்லை.ஆசையாய் வாங்கிய புத்தகத்தை நிம்மதியாக படிக்க முடியவில்லயே என்ற கோபம் ஒரு புறம், 

இந்த சிறுவன்தான் ஏதோ விளையாட்டுத்தனமா கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் இந்த மனிதர் அவனை அதட்டி ''பேசாம வாடா' என்று சொல்வதை விட்டு விட்டு சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றாரே என்கிற எரிச்சல் ஒரு புறம்  என பொறுத்து,பொறுத்து பார்த்த வாலிபர் ஒரு கட்டத்தில் முடியாமல் தனது புத்தகத்தை சட்டென்று மூடி விட்டு, 

அந்த தந்தையை நோக்கி.......

ஏன் சார், உங்க பையன்தான் ஏதோ கேட்குறான்னா, அவன அதட்டி அமைதிப்படுத்துவதை விட்டு விட்டு இப்புடியா பொது இடத்துல பேசிக்கிட்டே இருப்பீங்க.ஒரு புத்தகம் படிக்க முடியுதா.... என்ன ஆளு சார் நீங்க... 

என்று திட்டித் தீர்த்தார். 

அதற்கு அந்த தந்தை சிறிதும் கோபப்படாமல்  பதில் சொன்னார்.

என் மகனுக்கு பிறந்தது முதலே பார்க்கும் திறன் கிடையாது.அவனுக்கு கடந்த வாரம்தான் அறுவைசிகிச்சை மூலம் பார்வை கிடைத்தது.மருத்துவர் சிறிது நாட்களுக்கு அதிக வெளிச்சத்தை அவன் பார்க்க கூடாது என்று சொல்லி விட்டதால் மருத்தவமனைக்குள்ளேயே அடைந்து கிடந்தவன் இன்றுதான் முதன்முதலில் வெளியுலகை காண்கிறான்.அதனால்தான் இதுவரை கண்டிராத இந்த உலகத்தின் ஒவ்வொரு பொருளும் அவனுக்கு புதிதாக தெரிகிறது.நானும் அவனுக்கு கிடைத்த புதிய பார்வையால்  மனம் மகிழ்ந்து இருந்தேன்.உங்களை கவனிக்கவில்லை.மன்னித்து விடுங்கள் 

என்று சொன்னதும் அந்த வாலிபருக்கு கண்கள் கலங்கி விட்டது.அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

ஒரு புத்தகத்தை படிப்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து விட்டோமே,அதை எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.ஆனால் அந்த சிறுவன் தன்  வாழ்வில் எவ்வளவு முக்கியமான கட்டத்தில் இருக்கிறான். இப்படி செய்து விட்டோமே என அந்த வாலிபரின் மனசாட்சி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது. 

தற்போது மீண்டும் அந்த சிறுவனின் கேள்வி ஒலித்தது. 

தற்போது அந்த வாலிபர் பதில் சொல்ல துவங்கினார். :)

என்ன சகோக்களே கதை கேட்டாச்சா...இப்போ இந்த கதை மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை என்னனு  பார்ப்போமா?

அதுக்கு முன்னாடி ஒரு முக்கிய அறிவிப்பு.

இஸ்லாமிய பெண்மணி  தளத்தில் கட்டுரை போட்டி ஒண்ணு அறிவிச்சு இருக்காங்க. கட்டுரை போட்டியின் தலைப்பு:

 " கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா? "

அனுப்ப வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 31 இந்திய நேரம் இரவு 11.59 வரை.

அனுப்ப வேண்டிய முகவரி : contest@islamiyapenmani.com

பரிசு விபரங்கள்: முதல் பரிசு: 5,000 ரூபாய்
                                   இரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்
                                   மூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்

ஆண் , பெண் யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம். எந்த மதத்தவர்களும் கலந்துக்கொள்ளலாம்..

போட்டி பற்றிய முழு விவரங்கள் பாக்க கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்.
http://www.islamiyapenmani.com/2012/11/blog-post_3408.html

இதை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.ஒரு சமூகத்தின் மாற்றத்துக்கு உதவுங்கள்.சரி இப்போ படிப்பினைக்கு வருவோம் :)

1.எப்போதுமே தன் ஆசை,சந்தோஷம்தான் முக்கியம் என்ற எண்ணம் வேண்டாம்.உங்களை போலவே  ஆசைகளும்,சந்தோசங்களும் பிறருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2.ஒருவரை மேலோட்டமாக பார்த்து எந்த முடிவுக்கும் வர கூடாது. அவர்களின் சூழ்நிலை என்னவென்று நமக்கு முழுதாய் தெரியாத போது 
அமைதி காப்பது சிறந்தது. 

இது போன்ற சிறுசிறு விடயங்களை இயன்றவரை நம் வாழ்வில் செயல்படுத்துவோம்.அதன் மூலம் வாழ்வை மகிழ்வுடன் வாழ்வோம்.

இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்.

உங்கள் சகோ ஹசன்

 டிஸ்கி: கதை புத்தகத்தில் படித்தது :)

15 comments:

 1. ஸலாம் சகோ. அருமையான கதை, நல்ல படிப்பினை, பகிர்வுக்கு ஜெஸக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
  Replies
  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

   உங்களுக்கும் சகோ

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  அருமையான படிப்பினை தரும் கதை..முன்பே படித்தது தான் என்றாலும் படிக்கும் போது மனதை நெகிழச் செய்கிறது..

  ///எப்போதுமே தன் ஆசை,சந்தோஷம்தான் முக்கியம் என்ற எண்ணம் வேண்டாம்.உங்களை போலவே ஆசைகளும்,சந்தோசங்களும் பிறருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.///

  இதை சரியாக புரிந்து, செயல் படுத்தினாலே நிறைய பிரச்சனைகளில் இருந்து மீளலாம்...:)

  நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ..:)  ReplyDelete
 3. ம்ம்... புத்தகத்தில் இருப்பதை விடவும் வாழ்க்கையில் படிக்க வேண்டியது நிறைய்ய்ய உள்ளது என்கிறீர்கள். I agree. அழகிய, அருமையான பதிவு ஹசன் சகோ. பகிர்ந்தமைக்கு நன்றி. :)

  ReplyDelete
 4. உங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே..

  ReplyDelete
  Replies
  1. சகோ ....உங்களை பற்றி வலைசரத்தில் குறிப்பிட்டு உள்ளேன் ...நேரமிருந்தால் பார்க்கவும்..http://blogintamil.blogspot.com/2012/12/blog-post_16.html.

   Delete
 5. சலாம் ஹஸன் சகோ...

  உண்மை.. முற்றிலும் உண்மை.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் இருப்பார்கள்.. அதை புரிந்து கொள்ளாமல் கோபப்படுவது என்பது பொறுப்பற்ற செயல் தான்...

  இன்ஷா அல்லாஹ்.. கதையின் செய்தியை செயல்படுத்த முயற்சிப்போம்...

  ReplyDelete
 6. இயல்பாகவே குழந்தைகள் அதிகம் கேள்வி கேட்பவர்களாகவே இருக்கிறார்கள். மனதைத் தொட்ட கதை. பகிர்ந்ததுக்கு நன்றி சகோ ஹசன்.

  ReplyDelete
 7. //அந்த வாலிபருக்கு கண்கள் கலங்கி விட்டது.//

  எனக்கும்தான், மிகவும் நெகிழ்ச்சியான கதை. பகிர்விற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 8. ஆழமான கருத்துடன் கூடிய அருமையான கதை
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அருமையான கதை, பகிர்தலுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 10. SALAM,

  உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்,

  --------
  முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

  கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

  ReplyDelete
 11. கதை அருமை சகோ.

  ReplyDelete

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....