10 December 2013

பயணத் தோழனை பாதுகாப்போம்

சிறியவர்
பெரியவர் 
என்று பாராமல் 

உயர்ந்தவன் 
தாழ்ந்தவன் 
என்று எண்ணாமல் 


ஏழை
செல்வந்தன் 
என்ற பாகுபாடின்றி 

என்னை தேடி 
வந்தோரின் வாழ்க்கையின் 
பயணத்தை பரவசமாக்குகிறேன். 


பாரம் என்று பாராமல் 
பக்குவமாய் தாங்கும் என்னோடு 

பயணிக்கும் வரை 
பயணித்து விட்டு 
பாச பார்வையை கூட 
பரிசாக்காமல் 
பாய்ந்தோடுவீர்கள் 

பொறுத்துக் கொண்டு நானிருந்தும் 
பொங்கி வரும் கோபத்தில் 
பொதுவானவன் என்றும் பாராமல் 

ஆத்திரத்தில் அடித்து நொறுக்குவதும்,
எல்லைமீறி எரித்து கருக்குவதும் 
என்ன நியாயமோ மனிதமே?

-பேருந்து




4 comments:

  1. அருமையான உணர்வுப்பூர்வமான கவிதை சகோ
    இப்படிக்கு
    உலகதம்பி :-)

    ReplyDelete
    Replies
    1. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக உலக தம்பி

      இப்படிக்கு
      உள்ளூர் அண்ணன்

      Delete
  2. சிந்திக்க வேண்டிய கேள்வி...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ, யோசிக்க வேண்டியவர்கள் யோசிக்கணும்

      Delete

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....