29 October 2012

மனிதர்களை அவர்கள் மனம் மகிழும்படி அடையாளப்படுத்துங்கள்

A : ஏங்க இந்த ஏரியால இனியவன்-னு ஒருத்தர், அவரு வீடு எங்க இருக்கு-னு தெரியுமா?

B : இல்லைங்க தெரியாது

A : அவரு  பிரபல எழுத்தாளருங்க,நிறைய விருதுலாம் வாங்கி இருக்காருங்க 

B : அப்படியா! தெரியலைங்களே

A : (தயங்கியபடி) அவருக்கு கூட கொஞ்சம் உடம்பு சரியில்ல 

B : அட அந்த கால் கொஞ்சம்,நடக்க முடியாம தடுமாறி நடப்பாரே அவர  சொல்லுறீங்களா?

A : அவர்தான்

B : இத முதல்லயே சொல்ல கூடாதா.... இப்புடியே நேரா போய் வலது பக்கம் திரும்புனீங்க-னா இரண்டாவது வீடு. 



இந்த நிகழ்வில் இருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? அவர் சக மனிதரை அடையாளப்படுத்திய விதம் சரியா?

இப்படித்தான் இன்று பெரும்பாலான மக்கள் சக மனிதரின் குறையை சொல்லியே அவர்களை அடையாளப்படுத்துகிறார்கள்.சிலர் அறிந்தும்,சிலர் அறியாமலும் இப்படி செய்கிறார்கள்.ஆனால் சம்பந்தப்பட்டவரின் வலியை மட்டும் யாரும் அறிவதில்லை. 

இது மிகப் பெரும் சமூக கோளாறு.

மாற்றுத் திறனாளிகள் என்றில்லை.பலரும் இப்படித்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

உதாரணமாக

உடல் எடை அதிகம் உள்ளவரை குண்டன் என்றும்,
அதிக உயரம் இல்லாதவர்களை குள்ளன் என்றும்,
நிறத்தை வைத்து ஒருவரை  கருவாயன் என்றும்............


இப்படியே இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதில் உச்சக்கட்டமாக திருநங்கையாக இருப்பவர்களை வாய் கூசாமல்
ஒரு எண்ணை சொல்லி அடையாளப்படுத்துவதும் நம் சமூகத்தில் சர்வ,சாதாரணமாய் நடக்கிறது.



மாற்றுத் திரனாளிகளுக்கோ இதில் அநேக அடையாளங்கள் உண்டு.

அவர்களுக்கு பெற்றோர்கள் வைத்த  அழகிய பெயர்களை விட்டு விட்டு,

நொண்டி,குருடன்,செவிடன்,ஊமை,பைத்தியம்,சப்பாணி etc..etc.... என்று......


அவர்கள் வாழ்வில் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் சரி.இதுதான் அவர்கள் அடையாளம்.

ஆனால் சிலருக்கு மாற்றுத் திறனாளி என்றால் அர்ததம் தெரிவதில்லை.


படித்தவர்,படிக்காதவர் என்று பாகுபாடு இல்லாமல்
அனைவரும் இந்த செயலை செய்கின்றனர்.

ஒரு உண்மை சொல்லவா...

என் ஊரில் எனது வீட்டருகே வந்து என் பெயரை சொல்லி விசாரியுங்கள்.
யாருக்கும் தெரியாது.அதே நடக்க முடியாத ஒரு பையன் என்றால் அனைவரும் சொல்வார்கள்.

இதுதான் இப்போதைக்கு என் அடையாளம். 





இதனால் நாங்கள் எவ்வளவு மனம் உடைந்து போகிறோம் தெரியுமா?
எங்களைப் பெற்றோர் எவ்வளவு மனம் உடைந்து போகிறார்கள் தெரியுமா?
 எங்களுக்கு பார்த்து,பார்த்து அழகிய பெயர் சூட்டினார்களே....எதற்காக?

எங்களை நீங்கள் நொண்டி,குருடன்,செவிடன்,ஊமை என்று அடையாளப்படுத்தவா?

எங்களுக்கு இந்த சமூகம் உதவி செய்வது பிறகு,முதலில்
நிம்மதியாக வாழ விட்டால் போதும்.

நான் ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை சொல்லவில்லை.
அறிந்தோ,அறியாமலோ இவ்வாறு செய்பவர்களைதான்....


இறைவன் அருளால் இனியாவது இந்த நிலை மாற வேண்டும். 




எங்களையும் உங்களை போன்ற மனிதர்களாக பார்க்க தொடங்கி விட்டால் இது போன்ற வார்த்தைகளுக்கு வேலை இருக்காது. ஒரு சொல்லை பிறரை நோக்கிச் சொல்லும் முன் அந்த சொல் உங்களை நோக்கி வந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பேசுங்கள். 



ஒருவரை அவரின் திறமை,கல்வியறிவு,நற்குணம்,பதவி போன்றவையை
கொண்டு அவர் மனம் மகிழும்படி அடையாளப்படுத்துங்கள்.

அல்லது

இன்னாரின் மகன்,இன்னாரின் சகோதரன்,மாற்றுத் திறனாளி  என்றாவது

அடையாளப்படுத்துங்கள்.

இதை விடுத்து அவரின் உடல் குறைபாட்டை கொண்டு அடையாளப்படுத்துவதற்கு நீங்கள் அமைதியாக இருப்பதே நலம்.

இனி இதை நீங்களும் கடைப்பிடித்து உங்களை சுற்றி இருப்பவர்களையும்
கடைபிடிக்க சொல்லி மாற்றத்தை கொண்டு வருவீர்கள்  என்ற நம்பிக்கையுடன்.......
 
மாற்றுத் திறனாளி


டிஸ்கி : டிஸ்கி-னா என்ன-னு தெரிஞ்சுடுச்சு.அதான்  டிஸ்கி :)


57 comments:

  1. இதை வாசித்த போது உங்கள் வேதனையை உணர்ந்து கண் முட்டி விட்டது. இந்தச் சமுதாயத்தை என் சொல்வதெனத் தெரியவில்லை. இன்றைய போர் உலகில் உலகம் பூராகவும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. வளர்ந்த உலகில் அவர்களை இயன்றவரை மனம் நோகாமல் அரசும்,மக்களும் கவனிக்கிறார்கள்.இங்கிலாந்தில் பழைய ஒரு மந்திரிசபையில் உள்த்துறை அமைச்சராக இருந்தவர் ஒரு கண்பார்வையற்றவர்.
    நம் நாடுகள் அன்பை உலகுக்குப் போதித்த நாடென்பார்கள். ஆனால் நடைமுறை வாழ்வில் மிகக் கேவலமாக நடக்கிறார்கள்.
    அடிப்படை மனித இயல்புகளையும் தாரை வார்ப்போராக இருக்கிறார்கள். பல மாற்றுத் திறனாளிகள்
    ஆற்றல் மிக்கோராகவும், அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் வாழ்வோராகவும் இருக்கிறார்கள்.
    இதை ஏன்? பார்க்க மறுக்கிறார்களோ? தெரியவில்லை.
    அறிவு ஜீவிகள் என மார்தட்டுவோருக்கும் இக்குறைபாடு உண்டு. ஒரு தடவை எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் மனுஷபுத்திரனைச் சீண்டினார்.
    இவர்கள் மாறுவார்கள்...மாறவேண்டிய காலம் வருகிறது.




    ReplyDelete
    Replies
    1. ///நம் நாடுகள் அன்பை உலகுக்குப் போதித்த நாடென்பார்கள். ஆனால் நடைமுறை வாழ்வில் மிகக் கேவலமாக நடக்கிறார்கள்.///

      நாடு என்பதை விட மனிதர்களின் மனம் தான் காரணம் என்று நினைக்கிறேன் தோழா... விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

      ///ரு தடவை எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் மனுஷபுத்திரனைச் சீண்டினார்.///

      இது என்ன விடயம்? விளக்கம் பிளீஸ்....

      //இவர்கள் மாறுவார்கள்...மாறவேண்டிய காலம் வருகிறது.///

      மாற வேண்டும். :(

      Delete
    2. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  2. உங்களை போன்ற அற்புத மனிதர்களை காயபடுத்தும் மனிதர்கள் தான் குறையுள்ளவர்கள்
    என்பதை உணர்த்திவிட்டீர்கள் ...
    நீங்கள் அடைந்த வலியை உங்களைபோன்றோர் அடையக்கூடாது என நீங்கள் எடுத்துள்ள முயற்சி நிச்சயம் பலனளிக்கும் ...சகோ
    அற்புதமான எழுத்து நடை ....
    வியந்தேன்
    மகிழ்ந்தேன்
    தொடருங்கள் உங்கள்
    எழுத்து போரை ....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அடைந்த வலியை உங்களைபோன்றோர் அடையக்கூடாது என நீங்கள் எடுத்துள்ள முயற்சி நிச்சயம் பலனளிக்கும் ...சகோ///

      இறைவன் நாடினால் சகோ.இதுதான் இந்த பதிவின் நோக்கமே.

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  3. அன்புத் தம்பி,

    நீ கூறியது முற்றிலும் சரியே... நான் அறிந்து பலர் அறியாமையாளயே இவ்வாறு கூறுகிறார்கள் அல்லது அவர்கள் விளையாட்டாக சொல்லும் வார்த்தைகள் மாற்றுத் திறனாளிகள் மனதை அவர்கள் குடும்பத்தினரை எவ்வளவு பாதிக்கும் என்று அறியாமலே சொல்கிறார்கள்... மற்றபடி நம் சமூகத்தில் பெரும்பான்மையினர் குறையுடைவர்களை கிண்டல் செய்யும் மனம் படைத்தவர்கள் அல்ல...

    ReplyDelete
    Replies
    1. ///நான் அறிந்து பலர் அறியாமையாளயே இவ்வாறு
      கூறுகிறார்கள் அல்லது அவர்கள் விளையாட்டாக
      சொல்லும் வார்த்தைகள் மாற்றுத் திறனாளிகள்
      மனதை அவர்கள் குடும்பத்தினரை எவ்வளவு
      பாதிக்கும் என்று அறியாமலே சொல்கிறார்கள்... ///

      உண்மைதான் அறியாமல் சொல்பவர்களே அதிகம்..
      அந்த அறியாமையை அறிய செய்ய வேண்டியே
      இப்பதிவு. :(

      //மற்றபடி நம் சமூகத்தில் பெரும்பான்மையினர்
      குறையுடைவர்களை கிண்டல் செய்யும் மனம்
      படைத்தவர்கள் அல்ல...///

      இல்ல இல்ல நான் கிண்டல் செய்வதை பற்றி
      பேசவே இல்ல. கிண்டல் செய்பவர்கள் மிகச்
      சிறுபான்மையினரே. அதை பற்றி இறைவன் நாடினால்
      வேறு பதிவில் பார்க்கலாம். நான் இப்பதிவில் கூறுவது
      அடையாளப் படுத்துவது பற்றியே.

      Delete
  4. படிக்கும் அனைவரிடத்திலும் ஒரு மனமாற்றம் வரும் வந்துவிட்டது ....

    ReplyDelete
    Replies
    1. இதுதான் தேவை.

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  5. ஆம் சகோ, நல்லா சாட்டையடியாட்டம் சொல்லி இருக்கீங்க! நிச்சயம் மாற்றம் வரும், நம்புவோம்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு விரைவாக படித்து கருத்திட்டமைக்கு நன்றி... :)




      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  6. சமூக அறியாமையை இதைவிட அழகாக சொல்லமுடியாது.

    எனது பள்ளிநண்பன் ஒரு மாற்றுத்திறனாளி.
    இன்றும் அவனது ஊனத்தையும் குறிப்பிட்டுத்தான் அவன் பெயரை சொல்கிறார்கள். எனக்கு அந்த வார்த்தையை கேட்டால் நெஞ்சம் குமுறும்.
    நான் இன்றும் அவனது பெயரை மட்டும்தான் குறிப்பிடுவேன் என்பதை நினைத்துப்பார்க்கும்போது ஒரு அன்பு உள்ளத்தை நோகடிக்காமல் அரவணைத்த பெருமை எனக்கு.
    தொடருங்கள் சகோதரா...
    சமூகம் நிச்சயம் உங்கள் குமுறலை உணரும்.

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கு அந்த வார்த்தையை கேட்டால் நெஞ்சம் குமுறும்.///

      இந்த நிலைக்கு அனைவரும் வர வேண்டும்.அத்தோடு அப்படி சொல்பவர்களுக்கு
      புரியும்படி விளக்கவும் முயற்சிக்க வேண்டும்.

      ///நான் இன்றும் அவனது பெயரை மட்டும்தான் குறிப்பிடுவேன் என்பதை நினைத்துப்பார்க்கும்போது ஒரு அன்பு உள்ளத்தை நோகடிக்காமல் அரவணைத்த பெருமை எனக்கு.///

      இதில் எனக்கும் மகிழ்ச்சி :)

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  7. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    "Allah will reward you [with] goodness."

    ReplyDelete
  8. தாங்கள் மீது இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் நிலவட்டுமாக சகோ.

    உங்கள் பார்வையில் உங்கள் மனதை திறந்துள்ளீர்கள்.
    அந்த பார்வையினை இதுவரை அறியாதோருக்கு இப்பதிவு ஒரு புதிய பார்வை.

    அப்புறம், எனது பார்வையில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.
    //என் ஊரில் எனது வீட்டருகே வந்து என் பெயரை சொல்லி விசாரியுங்கள்.
    யாருக்கும் தெரியாது.அதே நடக்க முடியாத ஒரு பையன் என்றால் அனைவரும் சொல்வார்கள்.//-----இதில் இரண்டு வகையினர் இருக்கலாம். ஒருவர் உங்களின் வேறு ஒரு திறமையை அறிந்து இருந்தாலும் அதையெல்லாம் கூறாமல்... அடையாளத்துக்கு இதை மட்டுமே கூறுவது. இன்னொருவர், உங்களைப்பற்றி வேறொன்றும் அறியாது, இதனை மட்டுமே அறிந்து வைத்து இருப்பவர். இருவரையும் ஒரே தட்டில் வைக்கலாகாது.

    இசையமைப்பதற்கு, காது மிக முக்கியமான உறுப்பு என்பதை அறிவீர்கள்..! ஆனால், உலகம் போற்றும் இசை மாமேதை பீத்தோவான், அந்த திறமையினை இழந்திருந்தார். இவரை, 'இசைமாமேதை பீத்தோவான்' என்று அடையாளப்படுத்தாமல் 'செவிடன் பீத்தோவான்' என்று அடையாளப்படுத்துவதுதான் ஏற்கவே முடியாத அரக்கத்தனம். ஆனால், ஒருவர் கூட இப்படி சொல்லி இருக்க மாட்டார்; சொல்லவும் முடியாது, என்றே நான் நினைக்கிறேன். காரணம் அப்படி சொன்னாலும் அவரை யார் என்று எவருக்கும் தெரியாது. இசைமேதை என்று சொன்னால்தான் இன்று உலகுக்கு தெரியும். காரணம் அவரது அசாத்திய இசைத்திறன்... அவரின் மற்ற எல்லா குறைகளையும் மூடிவிடுகிறது. "என்னது... அவர், தான் இசையமைத்ததை தானே கேட்க இயலாதவரா?" என்ற ஆச்சரியம் தான் அவரை இதுநாள் வரை இசைமேதையாக அறிந்திருக்கும் பலருக்கும் ஏற்படும். ஆனாலும் உடனே இதை மறந்தும் விடுவர்.

    நான் சொல்ல வருவது யாதெனில்,
    ஒரு மாற்றுத்திறனாளி... தமது மாற்றுத்திறனை சாதனை அளவாக உலகிற்கு காட்டிய பின்னர், அவரின் குறைகள் ஒன்றுமில்லாமல் போய் உலகம் அதை மறந்தே விடுகிறது. முதலில், உங்கள் ப்ளாக் தலைப்பே கூட என்னை ஏதோ நெருடுகிறது.

    மிகவும் கஷ்டப்பட்டு படு திறமையாக எழுதுகிறீர்கள். படிக்கவே புத்துணர்ச்சியாக இருக்கிறது. போற்றபப்டத்தக்க எழுத்தாற்றல் உள்ளது உங்களிடம். ஆகவே, நீங்கள் உங்களின் உண்மையான பெயரில் எழுதினால்தான் உங்களின் பெயர் பதிவுலகில் 'எழுத்தாளர்' என்று நிலைக்கும். இல்லையேல்... என்னதான் நீங்கள் பதிவுலகில் உங்கள் எழுத்துத்திறனை கொட்டி ஏகப்பட்டோரை வென்றெடுத்தாலும் "மாற்றுத்திறனாளி" என்றே இப்பெயரை கடைசி வரை நிலைத்துவிடும்.

    மன்னிக்கவும். எனக்கு இந்த பெயரை உங்களுக்கு தரக்கூட மனம் ஒப்பவில்லை சகோ.........!

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக


      -----//என் ஊரில் எனது வீட்டருகே வந்து என் பெயரை சொல்லி விசாரியுங்கள்.
      யாருக்கும் தெரியாது.அதே நடக்க முடியாத ஒரு பையன் என்றால் அனைவரும் சொல்வார்கள்.//-----இதில் இரண்டு வகையினர் இருக்கலாம். ஒருவர் உங்களின் வேறு ஒரு திறமையை அறிந்து இருந்தாலும் அதையெல்லாம் கூறாமல்... அடையாளத்துக்கு இதை மட்டுமே கூறுவது. இன்னொருவர், உங்களைப்பற்றி வேறொன்றும் அறியாது, இதனை மட்டுமே அறிந்து வைத்து இருப்பவர். இருவரையும் ஒரே தட்டில் வைக்கலாகாது.----

      நீங்கள் கூறுவது புரிகிறது.அவர்கள் எண்ணத்தில் தவறில்லை
      தான்.ஆனால் அவரின் வார்த்தை சம்பந்தப்பட்டவருக்கு பாதிப்பை
      உண்டாக்கும் அல்லவா... அதைத்தான் இப்படி சொல்லி இருந்தேன்.

      ---இதை விடுத்து அவரின் உடல் குறைபாட்டை கொண்டு
      அடையாளப்படுத்துவதற்கு நீங்கள் அமைதியாக இருப்பதே நலம்.---

      எனது வேறு திறமையை அறியாயாததால் எளிதில்
      என்னை அடையாளப்படுத்த என் உடல் குறைபாடை
      கூறும் அவர்கள் எண்ணத்தில் தவறில்லை எனினும்
      இதை அவர்கள் தவிர்ப்பதே சாலச் சிறந்தது.

      Delete
    2. இசையமைப்பதற்கு, காது மிக முக்கியமான உறுப்பு என்பதை அறிவீர்கள்..!
      ஆனால், உலகம் போற்றும் இசை மாமேதை பீத்தோவான், அந்த திறமையினை
      இழந்திருந்தார். இவரை, 'இசைமாமேதை பீத்தோவான்' என்று அடையாளப்படுத்தாமல்
      'செவிடன் பீத்தோவான்' என்று அடையாளப்படுத்துவதுதான் ஏற்கவே முடியாத
      அரக்கத்தனம். ஆனால், ஒருவர் கூட இப்படி சொல்லி இருக்க மாட்டார்; சொல்லவும்
      முடியாது, என்றே நான் நினைக்கிறேன். காரணம் அப்படி சொன்னாலும் அவரை யார்
      என்று எவருக்கும் தெரியாது. இசைமேதை என்று சொன்னால்தான் இன்று உலகுக்கு
      தெரியும். காரணம் அவரது அசாத்திய இசைத்திறன்... அவரின் மற்ற எல்லா குறைகளையும் மூடிவிடுகிறது. "என்னது... அவர், தான் இசையமைத்ததை தானே கேட்க இயலாதவரா?" என்ற ஆச்சரியம் தான் அவரை இதுநாள் வரை இசைமேதையாக அறிந்திருக்கும் பலருக்கும் ஏற்படும். ஆனாலும் உடனே இதை மறந்தும் விடுவர்..! ///


      இந்த பதிவு முழுக்க முழுக்க இது போன்ற செயலை செய்யும்
      சில தமிழ் சமூக மக்களை நோக்கியே எழுதப்பட்டது. ஏனென்றால்
      என் வாழ்வில் நான் சந்தித்தது அவர்களைத்தான். ஒரு உதாரணம்
      சொல்லுகிறேன் கேளுங்கள். டான்சர் என்று ஒரு திரைப்படம் வந்தது.
      ஒரு மாற்றுத் திறனாளி தன் தடைகளை எல்லாம் தாண்டி எப்படி
      வாழ்வில் வெற்றி பெறுகிறார் என்பதே கதை.அதில் ஒரு மாற்றுத்
      திறனாளியே நடித்து இருந்தார்.தேசிய விருதும் வாங்கினார்.
      இங்கே அனைவரும் எப்படி அவரை அடையாளப்படுத்தினார்கள்
      தெரியுமா? ஒரு கால் இல்லாதவர் என்றுதான். :(


      ஜபருல்லாஹ் அண்ணாவின் கமெண்ட்

      ///எனது பள்ளிநண்பன் ஒரு மாற்றுத்திறனாளி.
      இன்றும் அவனது ஊனத்தையும் குறிப்பிட்டுத்தான்
      அவன் பெயரை சொல்கிறார்கள். எனக்கு அந்த
      வார்த்தையை கேட்டால் நெஞ்சம் குமுறும்.///

      Delete
    3. ///எனது வேறு திறமையை அறியாயாததால் எளிதில்
      என்னை அடையாளப்படுத்த என் உடல் குறைபாடை
      கூறும் அவர்கள் எண்ணத்தில் தவறில்லை எனினும்
      இதை அவர்கள் தவிர்ப்பதே சாலச் சிறந்தது.///

      ----------உங்கள் டாக்டர் இன்று கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தோடு உங்களைத்தேடி உங்களூருக்கு ஓடிவந்து உங்களுக்கு புகட்ட வேண்டி... 'உங்கள் வீடு எங்கே' என்று உங்கள் ஊரில் உள்ள பலரிடம் உங்கள் பெயரை சொல்லி வீட்டு முகவரி கேட்கிறார், என வைப்போம் சகோ. நீங்கள் இப்பதிவில் சொன்னது போலவே, பலருக்கும் உங்கள் பெயர் தெரியவில்லை. இப்போது... உங்களின் இப்பதிவை படித்து 'உங்களை ஊரில் எப்படி அடையாளப்படுத்தினால் கண்டு பிடிக்க முடியும்' என்று அறிந்த அந்த டாக்டர், 'அந்த வகையில் அடையாளப்படுதினால் எவராவது முகவரி சொல்லக்கூடும்' என்று கருதுகிறார். இந்த டாக்ட இப்போது என்ன செய்யவேண்டும்..?

      இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதா சகோ..? கேட்டால் கிடைத்திருக்கக்கூடிய அந்த வகையில் முகவரியை கேட்காமல் அந்த டாக்டர் பேசாமல் திரும்பி சென்று விடவேண்டுமா சகோ..?

      சிந்தியுங்கள்..! "மாற்றுத்திரனாளி" என்று உங்களை நீங்கள் அடையாளப்படுத்துவதை முதலில் தவிருங்கள் சகோ..!

      உங்களுக்கென்று உங்கள் பெற்றோர் வைத்த அழகிய அந்த பெயரிலேயே இனி எழுதுங்கள்..!

      //தாழ்வு மனப்பான்மை வேண்டாம் . அனைத்துமே இறைவன் நாடியபடியே நடக்கும் . விழிகளில் நீர் வழிய இதனை எழுதுகின்றேன். //---பழுத்த அனுபவசாலி பெரியவர் நீடூர் அலி அவர்கள் சொன்னதையே கனத்த மனதுடன் நானும் இங்கே வழிமொழிகிறேன் சகோ..!

      Delete
    4. ///நீங்கள் உங்களின் உண்மையான பெயரில் எழுதினால்தான் உங்களின் பெயர் பதிவுலகில் 'எழுத்தாளர்' என்று நிலைக்கும். இல்லையேல்... என்னதான் நீங்கள் பதிவுலகில் உங்கள் எழுத்துத்திறனை கொட்டி ஏகப்பட்டோரை வென்றெடுத்தாலும் "மாற்றுத்திறனாளி" என்றே இப்பெயரை கடைசி வரை நிலைத்துவிடும்.///

      இது சிந்திக்க வேண்டிய ஒன்று. ஊனமுற்றோர்
      என்ற பெயர் மறந்து மாற்றுத் திறனாளி என்ற
      பெயரை பலரும் அறிய வேண்டும் என்றே
      இப்பெயரை தேர்ந்தெடுத்தேன்.மாத்திடலாமா?
      ஏதாவது சஜ்ஜெஸ்ட் பண்ணுங்க அண்ணா...
      பொதுவான பெயர்... லைக் '' போராளி ''

      Delete
    5. '' போராளி '' ---------------மாஷாஅல்லாஹ். உங்கள் தேர்வு நன்றாக உள்ளது சகோ.

      இப்பெயர் நம் எல்லாருக்குமே பொருந்தும். எல்லாருக்குமே வாழ்வில் விதவிதமான கஷ்டங்கள் வெவ்வேறு அளவில் உள்ளன. அவரவர் கஷ்டங்கள் அவரவருக்கு. அதனோடு எல்லாருமே வெற்றிபெற போராடுகிறார்கள். அதில் விடா முயற்சி உடையார், போராடி வென்று மகிழ்ச்சி அடைகிறார். அல்ஹம்துலில்ல்லாஹ்...! புரிந்துணர்வோடு கூடிய தாங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி சகோ..!

      Delete
    6. ஒரு நாள் அபூதர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை நோக்கி கருப்பியின் மகனே! என்று அழைத்துவிடுகிறார் . இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)

      பிலால் (ரழி) அவர்களின் தாயார் கருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்திருந்தாலும் கருப்பியின் மகனே என்று அழைத்தது அவர்களுக்கு வேதனை அளித்துவிட்டபடியால், அதற்காக நபி (ஸல்) அவர்களும் தன்னை கடிந்து கொண்டபடியால் தன் தவறை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள் அபூதர் (ரழி) அவர்கள்.


      5388. வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) அறிவித்தார்
      ஷாம்வாசிகள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். 17 இரண்டு கச்சுடையாளின் மகனே!' என்று (அவரை) அழைப்பார்கள். அப்போது (அப்துல்லாஹ்வின் தாயார்) அஸ்மா(ரலி), 'என்னருமை மகனே! அவர்கள் உன்னை இரண்டு கச்சுகளைச் சொல்லிக் குறை சொல்கிறார்கள். 'இரண்டு கச்சுகள்' என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? அது என் கச்சுதான் அதை நான் இரண்டு பாதிகளாகக் கிழித்து அவற்றில் ஒன்றினால் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோல் பை(யின் வா)யைக் கட்டினேன். மற்றொன்றை அவர்களின் உணவு விரிப்புக்காக வைத்தேன்' என்று கூறினார்கள்.18
      அறிவிப்பாளர் வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) கூறினார்கள்:
      (இதன் பின்) ஷாம்வாசிகள் இரண்டு கச்சுகளைக் குறிப்பிட்டு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறும்போது அவர்கள் 'ஆம்! (உண்மைதான்.) இறைவன் மீதாணையாக! இது ஒரு கூப்பாடு இதில் உன் மீது எந்தக் குறையுமில்லை' என்று (ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி தமக்குத் தாமே) கூறுவார்கள்.
      Volume :6 Book :70

      Delete
  9. "என் ஊரில் எனது வீட்டருகே வந்து என் பெயரை சொல்லி விசாரியுங்கள்.
    யாருக்கும் தெரியாது.அதே நடக்க முடியாத ஒரு பையன் என்றால் அனைவரும் சொல்வார்கள்."
    தாழ்வு மனப்பான்மை வேண்டாம் . அனைத்துமே இறைவன் நாடியபடியே நடக்கும் . விழிகளில் நீர் வழிய இதனை எழுதுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் உங்களை அழ வைத்தற்கு வருந்துகிறேன்.ஆனால் சில விடயங்களை
      சொல்லியே ஆக வேண்டிய சூழ்நிலை.இறைவனுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.

      யதார்த்தை சொன்னேனே ஒழிய தாழ்வு மனப்பான்மை அறவே இல்லை.இருந்திருந்தால் பதிவுலகத்திற்கு வந்து இருக்க மாட்டேன்.

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  10. தாங்கள் கூறியதை படிக்கும்போதே அவர்களின் மேல் கோபம் வருகிறது. ஆனால், இப்படி செய்பவர்கள் இதை படித்தால் தாங்கள் எழுதிய விதமே நிச்சயம் அவர்களை மாற்றிவிடும்.

    மற்ற நண்பர்களுக்கும் இதை Share பண்ணிடறேன்.

    தங்களுக்கு கூறுவது ஒன்றுதான். உலகம் வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்.
    தங்களின் நம்பிக்கையிலிருந்து மட்டும் என்றும் விலகிவிடாதீர்கள். அனைவருக்கும் முன்னோடியாக நிச்சயம் உங்களால் வாழ முடியும்.

    அவங்க கெடக்கட்டும்.. சும்மா ஜாமாய்சிடலாம் வாங்க பிரெண்ட்...!
    நாங்க இருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. ///ஆனால், இப்படி செய்பவர்கள் இதை படித்தால் தாங்கள் எழுதிய விதமே நிச்சயம் அவர்களை மாற்றிவிடும். ////

      இறைவன் நாடினால் சகோ.இதுதான் இந்த பதிவின் நோக்கமே.

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  11. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

    இன்றைய சமூகத்தில் சர்வசாதாரணமாக கலந்து விட்ட ஒரு பழக்கம் இது..! ஒருவரின் உடல் குறையை வைத்து அடையாளப்படுத்துவது..!! இதில் நிறம், உயரம, உடல்வாகு போன்றவற்றுடன் அடையாளப்படுத்துவதும் கூட சம்மந்தப்பட்டவரை எந்த அளவு பாதிக்கும் என்று தெரியாமலேயே அனேகம பேர் இது போன்ற தவறை செய்கிறார்கள்..!
    அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு உண்மையை உணர்த்தி இருக்கும் சகோ...!

    தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை..! /"என் ஊரில் எனது வீட்டருகே வந்து என் பெயரை சொல்லி விசாரியுங்கள்.
    யாருக்கும் தெரியாது.அதே நடக்க முடியாத ஒரு பையன் என்றால் அனைவரும் சொல்வார்கள்."//இப்படி சொன்ன அதே வாயால் உங்களை பிரபல பதிவர் என்று அழைக்க வையுங்கள்.. அதுதான் உண்மையான வெற்றி...!

    வாழ்த்துக்களுடன்
    உங்கள் சகோதரி,
    ஷர்மிளா ஹமிட்..

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

      ///அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு உண்மையை உணர்த்தி இருக்கும் சகோ...! ///

      உணர்த்தி இருந்தால் மிக்க மகிழ்ச்சி சகோ... :)

      ///இப்படி சொன்ன அதே வாயால் உங்களை பிரபல பதிவர் என்று அழைக்க வையுங்கள்.. அதுதான் உண்மையான வெற்றி...! ///

      இறைவன் நாடினால் இது சாத்தியமே சகோ... :)

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  12. /டிஸ்கி : டிஸ்கி-னா என்ன-னு தெரிஞ்சுடுச்சு.அதான் டிஸ்கி :)// என்ன்னது தெரிஞ்சுடுச்சா?? எனக்கும் கொஞ்சம் அப்படின்னா என்னன்னு சொல்லுங்களேன்??? பல மாசமா அப்படின்னா என்னன்னே தெரியாம பதிவுல டிஸ்கி சேர்த்துக்கிட்டு இருக்கேன் அவ்வ்வ்வ்வ்வ் :)

    ReplyDelete
    Replies
    1. ஹ..ஹ..ஹ..ஹா. SAME PINCH. எனக்கும்தான் தோழி.

      Delete
    2. டிஸ்கி என்றால் இந்த கடிதத்தில் எல்லாம் எழுதுவோமே
      பின்குறிப்பு அப்படின்னு அது போலன்னு வச்சுக்கலாம்.... :)
      by யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் ///


      disclaimer///disc///டிஸ்கி by Mohamed Ashik

      Delete
  13. உலகம் பூரா இதே பிரச்சனை தான் போலயே ஹஹஹாஹா....!!

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி...ஹி...நான் கூட எனக்கு மட்டும் தான் தெரியலயோ-னு நினைச்சேன்.... இப்போதான் திருப்தியா இருக்கு... :)

      Delete
  14. salam
    nanba....!
    manasai thodum varikal....!
    nan ethuvarai eppadi eruntatillai enimelum eruka maten. Ungal pathivu mega arumai...!
    "porali" arumaiyana peyar keep it up.

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

      ///nan ethuvarai eppadi eruntatillai enimelum eruka maten///

      மிக்க மகிழ்ச்சி. :)

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  15. நீங்கள் சொல்லுவது உண்மையே பிறர் குறையை சொல்லி அடையள படுத்துவது கேளி செய்வது இது போன்ற செயல்கள் நம் நாட்டில் ஆதிகளவில் இருக்கிறது. இது போன்ற சொல்லுவது கிழ்தரமான செயல்கள் என்று அவர்களுக்கு தெரிவதில்லை, உங்கள் பதிவின் மூலம் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அதுவே இந்த பதிவின் வெற்றி. தொடருந்து எழுதுங்கள் நன்பரே. நாங்கள் உங்கள் உடன் தொடந்து வருகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ///உங்கள் பதிவின் மூலம் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அதுவே இந்த பதிவின் வெற்றி. ///

      நிச்சயமாக....

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  16. சொல்ல வந்ததை அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... சிறந்த படைப்பு...

    நன்றி...
    tm22

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  17. இது மாற்றுத்திரனாளிக்கு
    ‘அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின்பாலும் செயல்களின்பாலும் தான் நோட்டமிடுகிறான்.’(முஸ்லிம்- இப்னுமாஜா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  18. ஒரு நாள் அபூதர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை நோக்கி கருப்பியின் மகனே! என்று அழைத்துவிடுகிறார் . இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)

    பிலால் (ரழி) அவர்களின் தாயார் கருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்திருந்தாலும் கருப்பியின் மகனே என்று அழைத்தது அவர்களுக்கு வேதனை அளித்துவிட்டபடியால், அதற்காக நபி (ஸல்) அவர்களும் தன்னை கடிந்து கொண்டபடியால் தன் தவறை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள் அபூதர் (ரழி) அவர்கள்.


    5388. வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) அறிவித்தார்
    ஷாம்வாசிகள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். 17 இரண்டு கச்சுடையாளின் மகனே!' என்று (அவரை) அழைப்பார்கள். அப்போது (அப்துல்லாஹ்வின் தாயார்) அஸ்மா(ரலி), 'என்னருமை மகனே! அவர்கள் உன்னை இரண்டு கச்சுகளைச் சொல்லிக் குறை சொல்கிறார்கள். 'இரண்டு கச்சுகள்' என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? அது என் கச்சுதான் அதை நான் இரண்டு பாதிகளாகக் கிழித்து அவற்றில் ஒன்றினால் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோல் பை(யின் வா)யைக் கட்டினேன். மற்றொன்றை அவர்களின் உணவு விரிப்புக்காக வைத்தேன்' என்று கூறினார்கள்.18
    அறிவிப்பாளர் வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) கூறினார்கள்:
    (இதன் பின்) ஷாம்வாசிகள் இரண்டு கச்சுகளைக் குறிப்பிட்டு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறும்போது அவர்கள் 'ஆம்! (உண்மைதான்.) இறைவன் மீதாணையாக! இது ஒரு கூப்பாடு இதில் உன் மீது எந்தக் குறையுமில்லை' என்று (ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி தமக்குத் தாமே) கூறுவார்கள்.
    Volume :6 Book :70

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமான நபிமொழி சகோ... மிக்க நன்றி...

      Delete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நம் சமூகத்தில் மாற வேண்டிய பல விசயங்களுள் இதுவும் ஒன்று..

    நீங்கள் சொல்வதை போன்று அடுத்தவர்களின் நிலையை தனக்கு பொருத்தி பார்க்கும் போது தான் அதனுடைய வலி புரியும்..

    மாஷா அல்லாஹ்..நல்ல எழுத்து நடை தம்பி உங்களுக்கு..சொல்லிருக்கும் பாங்கு நல்லா இருக்கு..நிறையா எழுதுங்க..இறைவன் உங்களுக்கு அதிக கல்வி அறிவை கொடுக்க என் துஆ..

    நல்லதொரு பதிவுக்கு நன்றி தம்பி..:)

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக



      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  20. //ஒரு சொல்லை பிறரை நோக்கிச் சொல்லும் முன் அந்த சொல் உங்களை நோக்கி வந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பேசுங்கள்//

    நிச்சயமாக!

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்,

    தம்பி, மிக அழகாக நேத்திப்போட்டில் அடிக்கும்படியாக சொல்லிவிட்டீர்கள். இன்ஷா அல்லாஹ் நிலைமை மாறும். அதற்கு இந்த பதிவும் காரணகர்த்தாவாக இருக்கும்.

    எழுத்து நடை ரொம்ப இயல்மா எளிமையா இருக்கு. தொடர்ந்து கலக்குங்க...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும், நன்றி அண்ணா
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  22. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    அருமையான பதிவு சகோ!, உங்களின் உள்ளக்குமுறல்கள் எழுத்துக்களாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல் இன்றும் அடையாளப்படுத்தப்படுவது உண்மைதான். ஆனால் நாகரீக வளர்ச்சியின் தாக்கத்தில் இது தற்பொழுது வெகுவாக குறைந்து விட்டது என்று சொல்லலாம் ஆனால் முழுவதுமாக இல்லை.

    கவலைப்படாதீர்கள், உங்களின் குறைகளை நீக்கி நல்வாழ்வு அளிக்க இறைவன் போதுமானவன்.

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், பிரார்த்தனைக்கும், நன்றி அண்ணா
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  23. Good one thambi. Please do write often !!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும், நன்றி அண்ணா
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  24. வேதனையான உண்மைதான்..... எங்கள் தெருவிலும் ஒரு மாற்றுத்திறனாளி தையலைத் தொழிலாகக் கொண்டவர். முன்பெல்லாம் அவரது குறையைக் கொண்டே அடையாளப்படுத்தப்பட்டார்..... இப்பொ அல்ஹம்துலில்லாஹ்... பரவாயில்லை... அவரது பெயர்/தொழில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. கண்டிப்பாக இப்பதிவு பலரைத் திருத்தும்.

    ReplyDelete
    Replies
    1. அவரது பெயர்/தொழில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. கண்டிப்பாக இப்பதிவு பலரைத் திருத்தும்.///

      இறைவன் அருளால் அனைவரிடமும் நல்ல மாற்றம் வர வேண்டும்.
      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி சகோ
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  25. Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும், நன்றி அண்ணா
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  26. மாற்றுத்திறனாளி என்கிற பெயரை மாற்றி 'உங்கள் சகோ ஹசன்' என்று வைத்துக் கொண்டதற்கு முதலில் பாராட்டு.

    நான் குண்டு, நான் முட்டாள், எதுக்கும் உதவாதவன் என்று தங்களைத் தாங்களே இழிவு படுத்திக் கொள்பவர்கள் எப்படி பிறருடைய நல்லவைகளை காண முடியும்.
    முதலில் நாம் நம்மை மதிக்கணும்; நேசிக்கணும். அப்போதுதான் பிறரை சரியான வகையில் அடையாளம் காண முடியும்.

    நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்திய கட்டுரை வாழ்த்துகள்!

    ReplyDelete

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....