10 October 2012

நாட்டின் 5 முட்டாள்கள்

என்னைப் பொருத்த வரையில் நகைச்சுவையை நமக்குள்ளே வைக்க கூடாது.அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
copyrights பத்திலாம் யோசிக்க படாது. 

அதான் நான் பேஸ்புக்கில் படித்து சிரித்த ஒரு நகைச்சுவையை நீங்களும் சிரிக்கும் பொருட்டு இங்கு பதிகிறேன்.படிச்சி சிரிங்க..... :)

குறிப்பு : நகைச்சுவையை நகைச்சுவையாகவே ஏற்கும் பக்குவம் இருந்தால் மட்டும் தொடருங்கள்.

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
 

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

 “ஆம் மன்னா!”

 “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

 அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

 ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், 


“அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

 “இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

 “தொடரும்” என்றார் மன்னர்.

 “மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு 


என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

 “சரி அடுத்து”

 “இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
 “களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

 “அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

 மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

 நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

 ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

 “உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

 “சரி எங்கே முதலாவது முட்டாள்?”

 அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”  



என்ன இப்போ பேஸ்புக் தானே போறீங்க..........? #டவுட்டு :)

28 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்..... இப்படியா பல்பு கொடுப்பீங்க?

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. நான் என்ன புது பல்பா செஞ்சி கொடுத்தேன்.. எனக்கு வந்த பல்பை ஜஸ்ட் திருப்பி விட்டேன்.அவ்ளோதான் :)

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  2. Well as you said I am also one of those people :)

    bye the way I am from Canada, keep up with writing. I love to read Tamil.

    ReplyDelete
    Replies
    1. ---Well as you said I am also one of those people :---

      me too...me too...:)

      ---bye the way I am from Canada, keep up with writing. I love to read Tamil.---

      ஊக்கப்படுத்தியதற்கும் தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  3. ஸலாம்

    ஹ்ம்ம் ... நடத்துங்க நடத்துங்க ... நீயும் fb ல தானே இருக்குற !!!

    ReplyDelete
    Replies
    1. ---ஹ்ம்ம் ... நடத்துங்க நடத்துங்க ... நீயும் fb ல தானே இருக்குற !!!---

      ஆமா நான்தான முதல்ல முட்டாள் ஆனது.பிறகுதானே இங்கே.

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  4. நான் கதையைப் படிக்கவே இல்லைங்க....

    ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. @அருணா செல்வம் நான் கதையைப் படிக்கவே இல்லைங்க....

      ஹா ஹா ஹா...///

      படிக்காமலே எப்படி கதை னு சரியா சொன்னீங்க.... இப்போ என்ன செய்வீங்க... :)

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
    2. @ஹாரி பாட்டர்
      Me too... ///

      யார் அங்கே கதையையும் படித்து விட்டு நன்கு சிரித்து விட்டு மீ டூ என்று சொன்ன இவரைய் பீட்டு கிளப்புங்கள் :)

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  5. சற்றும் எதிர்பார்கவில்லை இப்படி சறுக்கி விடுவீர்கள் என்று... ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நானும் சற்றும் எதிர்பார்க்கவில்லை நான் இந்த கதையை படித்த போது.:)

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
  6. நேரில் பார்க்க முடியாதென்கிற தைரியம் உங்களை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் தவறான புரிதல்.ஆரம்பத்திலே நகைச்சுவை என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன். இருப்பினும் நகைச்சுவையின் வரம்பை மீறி உங்களை காயப்படுத்தியதாக நீங்கள் உணர்ந்தால் மன்னித்து விடுங்கள்.

      தகவல் : இது நான் எழுதிய என் சொந்த ஆக்கம் அல்ல.

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      விருப்பம் இருந்தால் தொடர்ந்து வாருங்கள். :)

      Delete
    2. பதிவில் திருத்தியது : குறிப்பு : நகைச்சுவையை நகைச்சுவையாகவே ஏற்கும் பக்குவம் இருந்தால் மட்டும் தொடருங்கள்.

      Delete
  7. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. நானும் வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்து
      Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... :)

      ///நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... ///

      நேரமெல்லாம் இருக்கு.மின்சாரந்தேன்................ :)
      சந்திப்போம்.

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete

  8. அப்பாடா !

    என் பெயர் இல்லை.


    சுப்பு தாத்தா.

    அப்படி சொல்லாதீங்க...இன்னும் உங்களை யாருக்கும் தெரியல்லை.

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  9. என்ன ஒரு வில்லத்தனம் .....??????!!!

    ReplyDelete
  10. குட் ஜோக்னு சொல்லிட்டு ஏன் அவ்வ் னு அழறீங்க? அழக்கூடாது... ஓகே. :)

    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
    தொடர்ந்து வாருங்கள். :)

    ReplyDelete
  11. ஹீ ஹீ.. ஒத்துக்குறேன்,, நாங்கதான் மொதோ முட்டாளுக....

    ReplyDelete
    Replies
    1. அதெப்புடி உங்களுக்கு முன்னால நான்தான் இந்த கதையை படிச்சேன்.
      நான்தான் ஃபர்ஸ்ட்.உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோமாக்கும்.... :)

      Delete
  12. எங்க .அத்தா தான் வீட்டில் இருந்து ..முட்டாள் .தண்டசோருனு சொல்லி திட்டுராருணா ..இங்கயுமா ..ஹ ஹ ஹ ஹ

    ReplyDelete
  13. தம்பி செம பல்பு
    வாய் விட்டு சிரிச்சேன் ....
    ம்.....
    பின்னி பெடலடுக்கிறாய்...
    ஹிட்ஸ் மழை தான் இனி உன் காட்டுல ..

    ReplyDelete
  14. செம பல்பு
    தம்பி பின்னி பேடலேடுக்கிறீங்க...
    வாய் விட்டே சிரித்து விட்டேன் போங்க ....

    ReplyDelete
  15. பல்பு வங்கியதையும் அறியமால் சிரித்துவிட்டேன், கொஞ்சம் அறுதலான விஷயம். முதல் இடத்திற்கு பயங்காரா போட்டி இருக்கும் போல தெரிகிறது ஹா ஹா ஹா

    ரசித்தேன் நன்பரே இதுபோல் அதிகபடியாக எழுதுங்கள்.... வெளிநாட்டு வாழ்கையில் சிரித்து ரொம்ப நாட்கள் ஆச்சு. நன்றிகள் பல நன்பரே,

    ReplyDelete

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....