ஏக இறைவனின் திருப்பெயரால்
ஒரு ரயில் பயணத்தில் தந்தையும்,அவரது 10 வயது மகனும் அவர்களின் எதிரே ஒரு வாலிபரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வாலிபருக்கோ ஒரு ஆசை.இந்த ரம்மியமான பயணத்தில் தான் தேடி அலைந்து வாங்கிய, தனக்கு விருப்பமான அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்து விட வேண்டுமென்று எண்ணி படிக்கத் துவங்கினார்.
படிக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே ''அப்பா அது என்னப்பா?'' என்று ஒலித்தது ஒரு குரல். எதிரில் இருந்த சிறுவன்தான் அது
சிறுவனின் தந்தை ''அதுதான் செல்லம் புத்தகம்,அதில் கதையெல்லாம் இருக்கும்.நான் உன்னை தூங்க வைக்க சொல்லுவனே, அது போல நிறைய கதைகள் இருக்கும்.
அந்த வாலிபர் ''10 வயது சிறுவனுக்கு புத்தகம் என்றால் என்னவென்று கூட தெரியாது போல'' என்று மனதிற்குள் எண்ணியபடியே படிப்பதை தொடர்ந்தார்.